கவின் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு

வரும் பிப்ரவரி 10-ந்தேதி கவின் நடித்துள்ள 'டாடா' படம் திரையரங்குகளில் ரிலீஸ் ..... 'பிக்பாஸ்' புகழ் நடிகர் கவின் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள திரைப்படம் 'டாடா'. இந்த படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பாக்யராஜ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இதையடுத்து ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நீறுவனம் வெளியிடுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் 'டாடா' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, வரும் பிப்ரவரி 10-ந்தேதி 'டாடா' படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என்று அறிவித்துள்ளது.