நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள ‘சைந்தவ்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள படம் ‘சைந்தவ்’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

சைலேஷ் கொலனு இயக்கத்தில் இது அவரது 75-வது படமாகும். வெங்கட் பொய்யானபள்ளியை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தியா முழுவதும் வெளியாகும் இந்தப் படத்தில் இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஆண்ட்ரியா, ஷ்ரத்தா நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படம் டிச., 22-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பொங்கலுக்கு ‘சலார்’ ரிலீஸ் ஆவதால், ‘சைந்தவ்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.