'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் மகிழ்ச்சி

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ‘பதான்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து கொண்டு வருகிறது. இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் பதான்.

இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 25-ம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

இதனை அடுத்து பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

எனவே அதன்படி, இந்த படம் உலக அளவில் ரூ.901 கோடியை வசூலித்துள்ளது. இதையடுத்து இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 'பதான்' படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.