அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் படத்தின் டீசர் வெளியாகியது!

உலக நாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படமான 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்ற படத்தின் படப்ப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . டிரண்ட் லவுட் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ராஜாகிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது என்றும், இந்த டீசரை அக்சராஹாசனின் சகோதரி ஸ்ருதிஹாசன் வெளியிடவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. அந்த வகையில்தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்பதான் ஆண்டவர் உனக்கு நல்லபுத்தி கொடுத்துருக்கான் என்ற வசனத்துடன் கூடிய இந்த டீசரில் 37 செகண்ட் அக்சராஹாசனின் கனவுக்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த டீசரில் அக்சராஹாசனின் லுக் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அக்சராஹாசன், உஷா உதுப், மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஷாலினி விஜயகுமார், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான் உள்பட பலர் நடித்துள்ளனர். சுஷா இசையில் ஸ்ரேயாதேவ் டூப் ஒளிப்பதிவில் கீர்த்தனா முரளி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.