நடிகர் ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் டைட்டில் வேட்டையன்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் 170 படத்தின் டைட்டில் வேட்டையன் என்று வைப்பார்கள் என்று கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

நடிகர் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம் புகழ் உச்சிக்கு சென்ற டி.ஜே.ஞானவேல், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 படத்தின் டைட்டில் குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தின் டைட்டில் வேட்டையன் என்று வைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருந்தால் ரசிகர்கள் செமத்தியாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்கின்றனர்.