மது கோப்பையுடன் புகைப்படம் வெளியிட்ட சின்னத்திரை நடிகை நித்யாராம்

நந்தினி சீரியலில் அனைவரையும் கவர்ந்தவர் நித்யாராம். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவர் மது கோப்பையுடன் உள்ள ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். இது இவரது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம். எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும், கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் இவர் மது கோப்பையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு அவபெயர் உண்டாகும் வகையில் வைரலாகி வருகிறது.