நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய திரைபடத்தின் அப்டேட் வெளியானது

ஐதராபாத்: புதிய படம் குறித்து அறிவிப்பு... மகா சிவராத்திரியை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் புதிய திரைப்படமான 'புராஜெக்ட் கே' 'Project K' குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

படத்தை தயாரிக்கும் வைஜயந்தி மோவி மேக்கர்ஸ் இத்திரைப்படம் அடுத்தாண்டு சங்கராந்தியை ஒட்டி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது 2024 ஜனவரி 12ம் தேதியை படத்தின் ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை அதற்கான போஸ்டருடன் பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபாஸ் குறித்த செய்திகளில் அதிக ஆர்வம் காட்டும் அவரது ரசிகர்கள் இந்த போஸ்டரை சமூக ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இத்திரைப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார்.

முன்னதாக பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த ஆண்டு பன்மொழித் திரைப்படமாக வெளிவந்த ‘ராதேஸ்யாம்’ திரைப்படத்தை அடுத்து புதிய திரைப்படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் பிரபாஸ் ரசிகர்களுக்கு இந்த திடீர் அறிவிப்பு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிரபாஸ், கிரித்தி ஷனோன் நடிப்பில் ஆதிபுருஷ மற்றும் பிரபாஸ், ஷ்ருதி ஹாசன், ப்ரிவிராஜ் சுகுமாறன் நடிப்பில் சலார் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையில் அத்திரைப்படங்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில் இந்தப் புதிய திரைப்படம் குறித்த ரிலீஸ் அறிவிப்பு மகா சிவராத்திரிக்கு கிடைத்த ஸ்பெஷல் அன்பளிப்பு என்பதாகக் கருதி பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.