டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

ஐதராபாத்: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது... ரவி தேஜா, நடிக்கும் பான் இந்திய படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது.

1970-களில் ஆந்திராவில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஸ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் பான் இந்தியபடைப்பான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.