கனெக்ட் படம் ஹாரர் மூவி என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு ட்ரைலர் வெளியீடு?

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹாரர் மூவியாகும். இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார், இதில் சத்தியராஜ், அனுபம் கேர், வினய் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்ச்சர் தயாரித்துள்ளது. ஹாரர் கதைகளத்தில் சஸ்பென்ஸ், த்ரில்லர் என உருவாகியுள்ள இப்படத்தின் ரன் டைம் 95 நிமிடம் ஆகும்.