பழங்குடியினர் - ஏலியன் டாஸ்க்... அடி, தடி மோதலாகி உள்ளதாம்!!!

சென்னை: பழங்குடியினர் - ஏலியன் டாஸ்க் அடிதடி வரைக்கு இழுத்து கொண்டு விட்டுள்ளது. அமுதவாணனும், அசீமும் முட்டி மோதிக் கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசால், ஷெரீனா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

தற்போது வீட்டில் 14 பேர் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 53வது நாளை நெருங்குகிறது.இதில், வளத்தை மீட்க பழங்குடியினருக்கும், வேற்றுகிரகவாசிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்த வார டாஸ்க்.