குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த தொலைக்காட்சி நடிகை மைனா!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மைனா கடந்த ஆண்டு திருமணம் செய்தார் என்பதும் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனை அடுத்து தற்போது குழந்தையின் புகைப்படத்தை நடிகை மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமன்றி தனது குழந்தையின் பெயரையும் அவர் அறிவித்துள்ளார். மைனாவின் குழந்தையின் பெயர் துருவன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மைனாவின் குழந்தைக்கும் மைனாவுக்கும் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், குழந்தையை தோளில் ஏந்தி கண் மூடி இருக்கும் மைனாவின் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த இரண்டு புகைப்படங்களும் பார்க்க மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.