ரசிகரின் கேட்ட கேள்விக்கு விரைவில் அப்டேட் என பதிலளித்த வெங்கட் பிரபு

சென்னை: தளபதி 68’ குறித்த அப்டேட் கேட்ட ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு விரைவில் என பதில் அளித்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் அக்டோபரில் திரைக்கு வரவுள்ளது. இத்துடன் விஜய்யின் 68-வது படத்தையும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் 3டி விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது. படத்தின் வேலைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய் சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ‘தளபதி 68’ குறித்த அப்டேட்டை சமூக வலைதளங்களில் கேட்டிருந்தார். இதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு விரைவில் என பதில் அளித்துள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.