எதிர்ப்புகள் வலுப்பதால் விலகி கொள்ள முடிவெடுத்துள்ள விஜய்சேதுபதி

சென்னை: எதிர்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருவதால் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகி விடுவார் விஜய் சேதுபதி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இதையடுத்து அவர் தனக்கு வேண்டியவர்களுடனும் சில இயக்குனர்களுடனும் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அந்தப் படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாக பேசப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் முத்தையா முரளிதரன் போன்ற தோற்றத்தில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.