ஜவான் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டர் வெளியானது

சென்னை: ‘ஜவான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘மரணத்தின் வியாபாரி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். யோகி பாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத். பான் இந்தியா திரைப்படம் ‘ஜவான்’ செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வரவுள்ளது.

இதையடுத்து, படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘ஜவான்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் சேதுபதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ‘மரணத்தின் வியாபாரி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.