விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் ...தேமுதிக தகவல்


சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் ... 2016-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, தனது உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தீவிர அரசியலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் விஜயகாந்துக்கு சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வரும் நிலையில், அவரது பெயரில் தேமுதிக தலைமையகம் வாயிலாக அறிக்கைகள் மட்டும் வெளியாகி கொண்டு வருகின்றன.

இதனை அடுத்து மாதம் ஓரிரு முறை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் குளிர்ந்த சூழல் நிலவி வருவதால், விஜயகாந்த் தொடர் இருமல், காய்ச்சல், சளி, தொந்தரவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18-ம் தேதி மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது:

தேமுதிக தலைவர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்று ள்ளார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக பரவும் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம். மேலும் இது முற்றிலும் தவறான தகவல். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.