திருமணத்திற்கு வந்த விஜய்யின் கெட்டப்: புதிய படத்திற்கா!!!

சென்னை: லியோ பட தயாரிப்பாளரின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள விஜய் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. இதில் விஜய்யின் கெட்டப் இணையத்தில் பேசும் பொருளாகி உள்ளது.

லியோ படம் பிரம்மாண்ட ஹிட் ஆன நிலையில், நடிகர் விஜய் தற்போது தனது அடுத்த படமான தளபதி68 படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கி வரும் அந்த படம் டைம் ட்ராவல் கதை தான் என தகவல் பரவி வருகிறது. விஜய் டபுள் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. அதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளரின் மகன் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொள்ள விஜய் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. விஜய்யின் மீசை தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.