விஜய் நடிக்கும் ... ‘விஜய் 68’ பாடல் காட்சி நிறைவு


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம், 'லியோ'. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதையடுத்து விஜய் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடித்து கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இது விஜய்யின் 68 வது படமான இதற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தான் சென்னையில் தொடங்கியது. முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

நட்பு பற்றிய இப்பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்று உள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்து உள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.