இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வால்நட்சத்திரம்?

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு வால் நட்சத்திரம் என்று ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் ராட்சசன் வெற்றி பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தலைப்பு வால்நட்சத்திரம் என கூறபடுகிறது.

இது குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இந்த வால் நட்சத்திரம் என்ற தலைப்பு செம ரீச் ஆகி வருகிறது.