மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறதா?

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் ரிலீசுக்குத் தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும், திரை அரங்குகள் திறந்த உடன் தான் பிரமாண்டமாக வெளியாகும் என்றும் படக்குழுவினர் ஏற்கனவே உறுதி செய்திருந்தனர்,.

ஆனால் சமீபத்தில் அமேசான் பிரைம் வெளியிட்ட விளம்பரம் ஒன்றில் 'மாஸ்டர்' திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் பெரும் குழப்பம் அடைந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தற்போது விளக்கம் அளித்துள்ளது

அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் விளம்பரத்தில் உள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கொரிய மொழி திரைப்படம் என்றும் தளபதியின் 'மாஸ்டர்' திரைப்படம் அல்ல என்றும் தளபதியின் 'மாஸ்டர்' படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் விஜய்யின் 'மாஸ்டர்' படம் திரையரங்குகள் எப்போது திறக்கப்படுமோ, அப்போதுதான் வெளியாகும் என்பது தற்போது மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.