விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லையாம்

சென்னை: விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்கவில்லை என்ற தகவல் கோலிவுட்டில் உலா வந்து கொண்டு இருக்கிறது.

தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து விஜய் எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

சமீபத்தில் விஜய் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடிக்க போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார் என்று விஜய் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படத்தில் யுவன் ஷங்கர் இசையமைக்க போவதில்லை என்று கோலிவுட்டில் ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.