ஞாபகச்சக்தியை அதிகரிக்கச் செய்யும் அற்புத குணம் கொண்ட வல்லாரை

நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ள வல்லாரைக் கீரை நம் ஞாபகச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

இயற்கையான முறையில் நமக்கு தினமும் அதிக பொருட்கள் கிடைக்கின்றன .ஆனால் நாமோ டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் செயற்கையான முறையில் தயாரிக்கும் பொருட்கள் மீது தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறோம் .

நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கையை மட்டுமே நம்பி அந்த இயற்கையுடன் வாழ்ந்தார்கள், அதனால் தான் அவர்கள் அனைவருமே 100 வயது வரை நோய் இன்றி வாழ்ந்தனர் .

ஆனால் அறிவியல் உலகம் என்ற பெயரில் இன்றோ , நாம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் .இவ்வாறு இயற்கையை மறந்து செயற்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும்.அதனால் தான் இளமை பருவத்திலேயே ஞாபகமின்மை போன்ற குறைபாடுகள் நமக்கு ஏற்படுகின்றன .

இந்த பதிவில் ஞாபகச் சக்தியை அதிகப்படுத்தும் மூலிகையை பற்றி பார்ப்போம். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின்கள் மிகுதியாக உள்ள ஒன்றாக வல்லாரைக் கீரை விளங்குகிறது. இதை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வாயு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும். மேலும் இந்த கீரை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

தினமும் அதிகாலையில் வல்லாரை இலையில் இருந்து பால் எடுத்து 30 மி.லி குடித்தால் போதும் உடம்பில் ஏற்பட்டுள்ள குஷ்ட நோய்கள், தோல் நோய்கள், ரத்தத்தில் ஏற்படும் பாதிப்புகள் குணமாகும்.

மன நோய்களை போக்க நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து அதிகாலையில் நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மன நோய்கள் விலகும் .

பசும்பால் 100 மில்லியுடன் வல்லாரை சாறு, கீழாநெல்லி இலைச்சாறு இரண்டையும் சம அளவு கலந்து அதிகாலையில் சாப்பிட்டு வர முற்றிய மஞ்சள் காமாலைகூட குணமாகும். வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊறவைத்து எடுத்து பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.