சத்தான பீட்ரூட் ஜூஸ் தயாரிப்பதற்கான எளிய செய்முறை உங்களுக்காக!!!

சென்னை; உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பீட்ரூட்டில் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்
பீட்ரூட் 2 எண்ணிக்கைஒரு சிறிய துண்டு இஞ்சிஅரை எலுமிச்சைதேன் தேவையான அளவு250 மில்லி தண்ணீர்

செய்முறை: முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களை சரியான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பீட்ரூட்டை தோலுரித்து நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கிய பீட்ரூட்டை இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு அதை வடிகட்டி தனியாக சாறு எடுக்கவும். மேலும் இந்த சாற்றில் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது சுவையான பீட்ரூட் ஜூஸ் ரெடி. மீதமுள்ள பீட்ரூட் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளக்கும்.

பயன்கள்:இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. பளபளப்பான சருமத்தை தருகிறது. உடலின் புத்துணர்ச்சியை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு நல்லது. இயற்கையான முறையில் உடல் கழிவுகளை நீக்குகிறது