தீப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது பீட்ரூட்

பீட்ரூட் உடலுக்கு ஆரோக்கியம் மட்டும் தருவதில்லை. தீப்புண்ணை ஆற்றும் குணம் பீட்ரூட்டுக்கு உண்டு.

பீட்ரூட்டைப் பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் நோய் குணமாகும். பீட்ரூட் சாருடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட்டை கூட்டு செய்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். மலச்சிக்கலை நீக்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உடலில் புதியதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

பீட்ரூட் சாறை தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சலுக்கு மேல் பூசிவர பிரச்னை தீரும். தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் விரைவில் ஆறும்.