நார்ச்சத்து உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது.


இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற கடுமையான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது., ஆனால் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் உடலில் இருக்கும் நச்சுகளும் வெளியேற்றப்படுகின்றன என்பது பலருக்கு தெரிவதில்லை.

நார்சத்து நிறைந்த பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. பொதுவாக நாம் உணவில் அக்கறை காட்டுவதில்லை. வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடல் நலத்தை மோசமாக்குகிறது. மேலும், வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இந்த வயிற்று பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கின்றன. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் குடிப்பதும் நன்மை பயக்கும். நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடலில் உள்ள நீர்சத்து குறையாமல் இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனுடன், நச்சுகளை வெளியேற்றவும் உதவுகிறது.