வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சென்னை: பேரிக்காய் சாப்பிடுவதால் என்ன பயன்கள் கிடைக்கிறது. அதில் உள்ள மருத்துவ குணநலன்கள் என்னவென்று தெரியுங்களா?

பேரி என்பது தாவரப் பேரினத்தைச் சேர்ந்தது. குளிரான மிதவெப்பத் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பேரி மரம் பழங்காலங்களிருந்து பயிரிடப்படுகிறது. இந்தப் பழச்சாற்றில் போதுமான அளவில் வைட்டமின்களும் கனிமச்சத்துக்களும் உள்ளன. அதிலும் இந்த ஜூஸ் ஆர்த்ரிட்டிஸ், வாதநோய் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.

மேலும், இது உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் பிரச்சனை, புரோஸ்டேட் பிரச்சனை மற்றும் ஆஸ்த்துமா போன்றவற்றை குணமாக்கும். இது சிறப்பான பானமாக உள்ளது.

ஒவ்வாமைத் தன்மை குறைந்து உள்ளது. நார்ப் பொருட்கள் கொண்ட உணவாகும்.