தேன்-இலவங்கப் பொடி உடலுக்கு அளிக்கும் பயன்கள்

பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும்.

இந்த பதிவில் தேனுடன் இலவங்கப் பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:


தேன் - 1 ஸ்பூன்
இலவங்க பொடி- 1 ஸ்பூன்.

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் ஊற்றி 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.

பிறகு இலவங்க பொடியை 1ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரை நாளைக்கு 2 முறை குடித்து வர ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதே போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதை குடித்து வந்தால் குழந்தை உண்டாகும்.

உடல் எடை குறைய இந்த முறையில் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

தேன் 1 ஸ்பூன்
இலவங்க பொடி 1 ஸ்பூன்
கிரீன் டீ 2 ஸ்பூன்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விட்டு கிரீன் டீ 2 ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் இலவங்க பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.