வளமான அளவில் நிறைந்துள்ள கால்சியத்தை கொண்ட கிவி பழத்தின் நன்மைகள்

சென்னை: வளமான கால்சியம்... கிவி பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது.

கிவி பழத்தில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், மோனோஅன் சாச்சுரேட்டட் கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளது. இந்த அனைத்து கொழுப்பு அமிலங்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்று செயல்படும்.

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட். புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். போதிய அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை எடுக்கும் போது, குடல் புற்றுநோய், இதய நோய், ஆஸ்டியோஆர்த்ரிடிஸ், பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்கும்.

இதில் உள்ள ப்ளேவோனாய்டு சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். கிவிப் பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும். கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது.

இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவும். முக்கியமாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு கிவி பழம் மிகவும் நல்லது.

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க, கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள். தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பவர்கள், தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் சோடியத்தை குறைத்து, பொட்டாசியம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. போலிக் அமிலம் கருவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்தாகும்.