நாட்டு ஆப்பிள் என்று புகழப்படும் பேரிக்காயில் உள்ள நன்மைகள்

சென்னை: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பேரிக்காயை நாட்டு ஆப்பிள் என்று அழைக்கின்றனர்.


கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. சிறுநீரக கல்லடைப்பு நீங்க உதவுகிறது. எலும்புகள், பற்கள் பலப்படவும் பயன்படுகிறது.

இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும்.

‘நாட்டு ஆப்பிள்’ என்றழைக்கப்படும் இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, ஏ, பி, பி2 என விட்டமின்கள் உள்ளன.