மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்க..!

மார்பக புற்று நோயானது பெண்களை அதிகமாக தாக்கும் ஓர் கொடிய நோயாகும். மார்பக புற்றுநோய் நமது அன்றாட பழக்கவழக்கங்கள் மற்றும் உணவுகளால் தான் வருகின்றன இருந்தாலும், ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

காளான், பூண்டு, மஞ்சள் போன்றவற்றை தினசரி உட்கொண்டு வந்தால் மார்பக புற்றுநோய் நம்மை அண்டாமல் தடுக்கலாம்.

காளான்
காளான் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் பரவவிடாமல் தடுக்கிறது. இதில் உள்ள உட்ப்பொருளே இதன் வளர்சியை தடுக்க உதவுகிறது.

பூண்டு
பூண்டு பல்வேறு நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. அதில் மார்பக புற்றுநோயைத் தடுப்பதும் ஒன்று. எனவே புற்றுநோய் தாக்காமல் இருக்க அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் செல்கள் பரவுவதையும், வளர்ச்சியையும் தடுக்கிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் தூள் மற்றும் தேன் கலந்து குடித்து வர, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.