உடல் எடையை குறைக்க உதவுகிறது பேரீட்சை பழம்

சென்னை: பேரீட்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். உண்மை என்னவென்றால் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரீட்சை சாப்பிடலாம்.

4 பேரீட்சை எப்படி உடல் குறைக்க உதவும் என்று பார்க்கலாம். வெளி நாடுகளில் பேரீட்சை டயட் என்றே பெயரிட்டு அதனை பின்பற்றி உடல் எடையை குறைக்கிறார்கள்.

தினமும் 4 பேரீட்சை காலை 2 மாலை 2 என சாப்பிட வேண்டும். அதனை சாப்பிடும் முறையை பார்க்கலாம்.

தேவையானவை

பேரிட்சை -2
பசும் பால்- 1 கப்
மஞ்சள் – 1 சிட்டிகை
தேன் – 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை: காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான பசும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

பின்னர் இரண்டு பேரீட்சை பழத்தை சாப்பிட வேண்டும். இது போலவே இரவும் குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்யும்போது 15 நாட்களிலேயே உங்களுக்கு பலன் தெரிய ஆரம்பிக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க. பேரீட்சை பழம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதும், அதேபோல இரும்புச் சத்து அதிகம் கொண்டதால் பேரீட்சை பழம் நிறைய எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடை குறைக்க நினைக்கிறவர்கள் பேரீட்சை பழம் மட்டுமல்ல, வேறு எந்த ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும்.

சாலட் அல்லது வேறு ஸ்வீட்டுகள் செய்கிற போது பேரீட்சை பழத்தை நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். அதனால் அந்த ரெசிபியில் இயல்பாக சேர்க்கும் சர்க்கரையின் அளவும் குறையும். ஒரு கிளாஸ் சூடான பாலில் பேரீட்சை பழத்தை போட்டு ஊற வைத்தும் சாப்பிடலாம்.