வாழைப்பழங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியுங்களா?

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வாழைப்பழம் எப்படி இருந்தால் வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உலக மக்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

பொதுவாக அனைத்து பழங்களுமே சத்து நிறைந்ததுதான். ஆனால் விலையுடன் ஒப்பிடும்போது ஏராளமான சத்துக்கள் அடங்கிய, எல்லோராலும் வாங்கி சாப்பிடக்கூடிய எல்லா காலங்களிலும்,எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது வாழைப்பழம்.

சாதாரணமாக நம்முடைய நாட்டு வாழைப்பழம் அதிக விலைக்கு விற்கப்படும்போது இந்த மோரிஸ் வாழைப்பழம் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இது அளவில் பெரிதாக பார்க்க பளிச்சென்று இருக்கும். இதன் விலை ஏன்? இவ்வளவு குறைவாக உள்ளது என நாம் யாரும் யோசித்தது இல்லை.

நம்மை பொறுத்தவரையில் விலை மலிவாக இருக்க வேண்டும், பார்க்க நன்றாக இருக்கவேண்டும். இது நமக்கு நன்மையா ? தீமையா ? என்று கூட யோசிப்பதில்லை. நம் நாட்டு பழங்களை பழுத்த நிலையில் 2-நாட்கள் வரையே வைத்திருக்க முடியும். ஆனால் இந்த வகை பழங்கள் பல நாட்கள் வைத்திருந்தாலும் கெட்டுப் போவதில்லை

இந்த மோரிஸ் பழ மரங்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க பலவித பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கரப்பான் பூச்சியின் மரபணுக்கள் சேர்த்துதான் இந்த வகை பழம் உருவாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கின்றன. உண்மையில் இந்த பழத்தினால் எந்த ஒரு மருத்துவ நன்மையும் கிடைக்காது. மாறாக இதனால் தீமைகளே அதிகம் என கூறப்படுகிறது. அதே போல் மரபணு மாற்றப்பட்ட இந்த பெரிய அளவிலான மஞ்சள் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.