சமூக வலைதளங்களில் அழகானவர்களை பார்க்கும் போது பெண்களுக்குள் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறதா?

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அழகானவர்களின் புகைப்படங்களை, காணொளிகளைப் பார்க்கும்போது அல்லது நட்சத்திரங்களின் மிகைப்படுத்தப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது பெண்களுக்குள் தாங்கள் அழகற்றவர் என்பது போன்ற எண்ணம் ஏற்படுகிறதா?

தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களும், பயனர்களுக்கு அவர்களது தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இடமாக மாறி வருகின்றன. பலரது தோற்றத்தையும், செயல்பாட்டையும் பார்த்து தங்களது தோற்றம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் தாழ்வு மனப்பான்மையையும், ஒருவித மன அழுத்தத்தையும் அடையச் செய்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் மாக்கியூரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், சமூக ஊடகங்களில் பெண்கள் தங்களது தோற்றத்தை திரை நட்சத்திரங்களுடனும், பிரபலங் களுடன் அதிகளவில் ஒப்பிடுவதும், தங்களது குடும்பத்தினருடன் பொருத்திப் பார்ப்பதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை பெண்கள், தங்களைப் பற்றிய நேர்மறையான தகவல்களை மட்டும்தான் பதிவு செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை குறித்த மற்றொரு பகுதியை அறியாதவர்கள், தங்களது வாழ்க்கையின் மோசமான நினைவுகளுடன் ஒப்பிடுகின்றனர். இதுவே பிரச்சினையின் தொடக்கமாக அமைகிறதாக கூறப்பட்டுள்ளது.

இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிகள்: பெண்கள் தங்களை யாருடனும் ஒப்பிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் நல்ல பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டுமென்று விரும்பினால், அதற்கேற்றாற்போல் தகவமைப்பு செய்ய வேண்டும். சமூக வலைதளங்களில் நேர்மறையான எண்ணத்தை உண்டாக்கும் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தெரிவுகளை இளம்பெண்கள் மாற்றி அமைக்கலாம்.