சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பு எதுவும் இல்லை ... அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்கடங்காத வகையில் பரவி கொண்டு வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் சீனாவில் பல லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சீனாவில் உயர்ந்து வரும் கொரோனா பரவல் குறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

இதனை அடுத்து இது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது: சீனாவில் தற்போதுகூட கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட தமிழகத்தில் ஒமிக்ரான் போன்ற பாதிப்பு எதுவும் இல்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 96% பேர், 2- ம் தவணை 92% பேர் செலுத்தியதன் மூலம் 90% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது என அவர் கூறினார்.