இடுப்பு வலியால் அவதியா... அப்போ பரிவ்ரத பார்ச்சவ கோணாசனா தீர்வு தரும்

சென்னை: இடுப்பு வலிக்கு தீர்வுகள் நிறைய இருந்தாலும், இடுப்பும், தொடையும் இணையும் கவட்டிப் பகுதியில் வலியை போக்க யோகாவில் ஒரு ஆசனம் இருக்கிறது. அது பரிவ்ரத பார்ச்வ கோணாசனா என்பதாகும்.

முதலில் தடாசனத்தில் நிற்க வேண்டும். அதாவது நேராக நிறக் வேண்டும். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தபடியே இரண்டு கால்களையும் அகற்றி நில்லுங்கள். கைகள் நேராக உடலோடு சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் மூச்சை விட்டபடி, உடலை வலது பக்கம் திருப்புங்கள். இடது கால் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும்.

இப்போது வலது கையை மேலே தலைக்கு மேலே உயர்த்துங்கள். தலையை மேலே பார்த்தபடி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆசனத்தில் அரை நிமிடம் இருக்க வேண்டும்.

பின்னர் மெதுவாய் கைகளையும், கால்களையும் தளர்த்தி, இயல்பு நிலைக்கு வாருங்கள். இதே போல் அடுத்த காலுக்கும் செய்யவும். பலன்கள் : இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் நெகிழ்வுத் தன்மையை தரும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க வைக்கும். அடிவயிற்றில் உள்ள உறுப்புக்களை செயல்படவைக்கும். ரத்த கொதிப்பு, தூக்கமின்மை தலைவலி இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.