உடல் நலப்பிரச்னைகள் இருப்பவரா நீங்கள்... அப்போ காலிஃபிளவர் வேண்டாம்

சென்னை: காலி ஃபிளவரை குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள், அளவுக்கு மிஞ்சிய அளவில் இதனை உட்கொண்டால், பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

காலிஃபிளவர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க கூடிய, விரும்பி உண்ணப்படும் ஒரு காய்கறி. தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவுகளில், இது பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது.

இதனை சமைப்பதும் மிகவும் எளிது. இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள், அளவுக்கு மிஞ்சிய அளவில் இதனை உட்கொண்டால், பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காலிஃபிளவர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. அவை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலிஃபிளவரில் போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் என பலவித சத்துக்கள் உள்ளன.

வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை காலிஃபிளவரில் உள்ளன. ஆனால் அளவிற்கு அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், காலிஃபிளவர் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இது T3 மற்றும் T4 ஹார்மோன்களின் சுரப்பை காலிபிளவர் அதிகரிக்கிறது. இது தைராய்டு நோயாளிகளுக்கு நல்லதல்ல.

காலிஃபிளவரில் ராஃபினோஸ் என்ற தனிமம் உள்ளது. இது ஒரு வகையான கார்போஹைட்ரேட் ஆகும், இதனை நம் உடல் இயற்கையாக உடைக்க முடியாமல் இருப்பதால், சிறுகுடல் வழியாக பெரிய குடலை சென்றடைகிறது. இதன் காரணமாக வயிற்றில் வாயு பிரச்சனை எழத் தொடங்குகிறது.

காலிஃபிளவர் பொட்டாசியத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது, எனவே அதை அதிகமாக உட்கொள்பவர்களின் இரத்தம் படிப்படியாக கெட்டியாகத் தொடங்குகிறது. மாரடைப்பு ஏற்பட்ட பலர் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர், எனவே காலிஃபிளவரை அதிகம் உட்கொள்வது அவர்களுக்கு ஆபத்தானது.