பிரா அணிவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா?

பெண்கள் பிரா அணியாமல் இருப்பது தவறானதா என பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு ஒன்றில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பிரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களிடமிருந்து சில கருத்துக்களை பெற்றுள்ளார். அந்த கருத்தின் படி, பிரா அணியாமல் இருப்பவர்களுக்கு மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, மார்பகத்திற்கு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

சிலர் பிரா அணியாமல் இருந்தால் மார்பகம் இறங்கி விடுவதாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் வயது அதிகரித்தல், குழந்தைப் பேறு, குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போன்ற பல செயல்களால் மார்பகங்களின் இறுக்கம் குறைவது இயற்கையானது. சரி அப்போ பிரா அணிவது தவறானதா அல்லது ஏதாவது பிரச்னைகள் ஏற்படுமா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இதற்கான விடையை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிரா அணியும் போது பல பெண்களுக்கும் அந்த இடத்தில் அரிப்பு, தடையம் போன்ற சரும பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் முதுகு வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆகவே இதனை தவிர்ப்பதே நல்லது.

பிரா அணியும் போது சிலருக்கு மார்பகங்கள் வீக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த வீக்கம் மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமாக சொல்லப்படுகிறது. இதனை நாம் அணியாமல் இருக்கும் போது மார்பக பகுதியில் இயற்கையாக வளரக் கூடிய திசுக்கள் ஆரோக்கியமாக வளர்ந்து, மார்பகத்திற்கு நன்மையை தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரா அணியும் போது உடலில் சீரான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் மெதுவாக நடைபெறுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரா அணியும் போது அந்த பகுதியில் இறுக்கமாக இருப்பது அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து பெண்களிடம் ஆய்வில் கருத்துகள் கேட்டபோது இரவில் மட்டும் பிரா அணிவதை தவிர்ப்பதாக பலரும் கூறியுள்ளனர். இதனால் இந்த நேரத்தில் அவர்கள் சௌகரியமாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.