தூக்கமின்மையால் உடல் பருமனாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்

சென்னை: தூக்கமின்மையை அனுபவிக்கும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் முறையே 55% முதல் 89% பேர் உடல் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே 8 மணி நேரத் தூக்கம் எடையைக் கட்டுப்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. ஆரோக்கியமான தூக்கம் உங்கள் செறிவை மேம்படுத்தும். செறிவு, அறிவாற்றல், செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் உட்பட உங்கள் மூளையின் செயல்பாட்டின் அனைத்து அம்சங்களுக்கும் தூக்கம் முக்கியமானது. இதனால், நீங்கள் நாள் முழுவதும் அதிக கவனத்துடன் செயல்பட உதவும்.

உதாரணமாக அதிக நேரம் தூங்கும் கூடைப்பந்து வீரர்களின் வேகம், துல்லியம், எதிர்வினை நேரங்கள் மற்றும் மனநலம் ஆகியவை கணிசமாக மேம்படுவதாகக் கூறப்படுகிறது.

சரியான அளவு தூங்கும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெற்று ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகுவதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரம் அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதற்காகக் குறைந்த நேரம் தூங்குவது பெருமையான விஷயம் இல்லை எனச் சொல்லப்படுகிறது.

போதுமான தூக்கம் இயற்கையாகவே மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. மனச்சோர்வு போன்ற சில மனநலப் பிரச்சினைகள் தூக்கக் கோளாறுகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில நாட்கள் தூக்கமில்லாத இரவுகளுக்குப் பிறகு, நீங்கள் வேலையில் இருக்கும் சக ஊழியருடன் எரிச்சல் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.

எனவே, போதிய தூக்கம் சமூக தொடர்புகளை மேம்படுத்தும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.