ஓமத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

சென்னை: வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு உடனடி நிவாரணத்திற்கு ஓமம் கலந்த தண்ணீர் கொடுக்கப்படுவது வழக்கம். இதில் பல்வேறு மருத்துவக்குணங்கள் அடங்கி உள்ளது.

பொதுவாக மசாலாப் பொருட்கள் உணவுகளுக்கு கூடுதல் சுவை கொடுக்க சேர்க்கப்படுவதோடு மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் திடீரென ஏற்படும் சில லேசான பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்க கூடியவையாகவும் அறியப்படுகின்றன.

சீசன் சரியில்லாத போது அல்லது வேறு பல சில காரணங்களால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு அல்லது வயிற்று தொற்று போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுவோருக்கு உடனடி நிவாரணத்திற்கு ஓமம் கலந்த தண்ணீர் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஓம விதைகளை பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும்.

மும்பை ரெஜுவா எனர்ஜி சென்டரின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் நிருபமா ராவ் கூறுகையில், ஓம விதைகள் (ஓமம்) செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிப்பதோடு மட்டுமின்றி ப்ரோட்டீன், எண்ணெய் வடிவில் உள்ள கொழுப்புகள், தாதுக்கள் மற்றும் ஏராளமான நார்ச்சத்து ஆகியவற்றின் ஆற்றல் மையமாக இருக்கின்றன.

இவை தவிர ஓமத்தில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், தயாமின், இரும்பு மற்றும் நியாசின் உள்ளிட்ட முக்கிய விஷயங்களும் அடங்கியுள்ளன என்றார். ஓமம் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் குறிப்பாக பண்டிகை காலங்களின் போது இதனை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பற்றி இங்கே பார்க்கலாம்..

100 கிராம் ஓமத்தில் என்னென்னெ சத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ப்ரோட்டீன் -17.1 கிராம்கொழுப்பு - 21.8 கிராம்மினரல்ஸ் - 7.9 கிராம்டயட்ரி ஃபைபர் -21.2 கிராம்கார்போஹைட்ரேட் - 24.6 கிராம்எனர்ஜி -363 கிலோகலோரிகால்சியம் -1525 மி.கிபாஸ்பரஸ் - 443 மி.கிஇரும்பு - 12.5 மி.கி

தொடர்ந்து ஓமம் எடுத்து கொள்வதால் கிடைக்கும். ஓமம் என்றாலே செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க கூடியது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் ஒரே நேரத்தில் பல்வேறு பதார்த்தங்களை உண்டு மகிழும் பண்டிகை நேரத்தில், நம் உடல் மற்றும் செரிமான ஆரோக்கியத்திற்கு ஓமம் பாதுகாப்பை அளிக்க கூடும்.

பண்டிகை நாட்களில் ஹெவியான உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் அஜீரணம், உப்பசம் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படலாம். ஓமத்தின் கார்மினேடிவ் பண்புகள் இந்த பிரச்னைகளை சரி செய்ய உதவும்