உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் அகத்தி கீரையில் உள்ள மருத்துவ குணம்

சென்னை: கீரை வகைகள் எப்போதும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியவைதான். அதிலும் சில வகை கீரை வகைகள் மருத்துவ குணம் கொண்டவை என்பதை அறிந்துள்ளீர்களா. இதோ உங்களுக்காக!!!

அகத்தி கீரையில் 63 வகை சத்துகள் இருக்கிறது. அகத்தி கீரை இலை தமிழ்நாடு உட்பட தென்னிந்திய சமையலில் அகத்தி கீரை மற்றும் அகத்தியின் பூவும் சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பிரச்னைகள் அனைத்தும் தீரும். முக்கியமாக வயிற்றுக்கோளாறு, செரிமானம் போன்றவை சரியாகும். அகத்தி கீரையில் 8.4 விழுக்காடு புரதம், 1.4 விழுக்காடு கொழுப்பு, 3.1 விழுக்காடு தாது உப்புகள் இருக்கிறது.

மாவுச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் (உயிர்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன. அகத்தியின் பட்டையும், வேரும் மருந்துப்பொருள்களாக பயன்படுகிறது. அகத்திக்கீரை உடலின் உள்ளே இருக்கும் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை வாய்ந்தது. தாய்ப்பால் அதிகம் சுரக்க செய்யும் தன்மை கொண்டது. மூளையை பலப்படுத்தும் சக்தி அதிகம் உள்ளது.

இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் பித்தத்தை தணிக்கலாம். இதை உலர்த்தி சூரணம் செய்து காலை, மாலை வெந்நீரில் கலந்தும் குடிக்கலாம். இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப்புண் படிப்படியாக குணமாகும். தொண்டையில் ஏற்படும் புண்களை குணப்படுத்த அகத்தி கீரையை மென்று தின்றால் விரைவில் குணமாகும். இப்படி சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான் அகத்தி கீரை.

பொன்னாங்கண்ணி கீரை மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. கண் சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தடுக்கும். இது ஈரமான இடங்களில் வளரும் தாவரம் ஆகும். இதற்கு கொடுப்பை, சீதை என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இளம் தளிர் பாகங்கள் உணவுக்கு பயன்படும் உணவு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக பயிரிடவும் படுகிறது.

இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதுமையிலும் கண்ணாடி அணிய வேண்டிய தேவை இருக்காது. கண் எரிச்சல் கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் கட்டி போன்றவற்றை நீக்கும் தன்மை கொண்டது. வாய்நாற்றம், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் மிகவும் சிறந்தது.