சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பம் பூ மிகவும் உகந்ததாகப் பார்க்கப்படுகின்றது, வேப்பம்பூவில் மிகவும் ருசியான சூப் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானவை:
வேப்பம் பூ - 4 டீஸ்பூன் வெண்ணெய் - 4 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் வெண்ணெய் ஊற்றி வேப்பம் பூவைப் போட்டு
வதக்கவும். அடுத்து இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
கொதிக்க விடவும்.
இதனுடன் உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு
கலந்து 2 நிமிடம் கொதிக்கவிட்டால் வேப்பம் பூ சூப் ரெடி. மிகவும்
ஆரோக்கியம் நிறைந்த இந்த வேப்பம்பூ சூப் ஆரோக்கியமான ஒன்று. வாரத்திற்கு
இருமுறை இந்த வேப்பம் சூப்பை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்வது
சிறப்பான ஒன்றாகும்.