உடல் எடை குறைப்பிற்கு உதவும் வேர்க்கடலை

சென்னை: பல மனிதர்கள் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், உடல் எடையை நினைத்த அளவிற்கு குறைக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

நாம் உட்கொள்ளும் உணவுகளும் உடல் எடையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்தவகையில், உடல் எடை குறைப்பிற்கு வேர்க்கடலை அருமருந்தாக உள்ளது.

வேர்க்கடலை சாப்பிடுவதால், அதில் காணப்படும் நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் புரதத்தின் கலவை நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்க உதவுகிறது.

வேர்க்கடலை அடிக்கடி பசி ஏற்படுவதை கட்டுப்படுத்தி எடை இழப்பு முயற்சியை துரிதப்படுத்த உதவுகிறது. இதேவேளை, வேர்க்கடலையை சாப்பிடுவதால் எமது உடலில் வளர்சிதை மாற்ற விகிதம் வேகமாக அதிகரிக்கிறது.