அன்னாசி பழத்தில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் உள்ளதாம்


அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.

இதில் 75% நீர்சத்தும், மீதம் சர்க்கரை, வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், நார்சத்து, ப்ரோமிலைன் (Bromelain) என்ற சக்தி வாய்ந்த வேதிப்பொருள் அதிக அளவிலும், மருத்துவ நன்மைகள் உள்ளது. இப்பழத்தின் முக்கிய தன்மை உடலில் ரத்தத்தை விருத்தி செய்ய, சிறந்த டானிக் மற்றும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக செயல்படுகிறது.

1.அன்னாசி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் சி சருமத்திற்கு நன்மை பயத்து நம்மை பாதுகாக்கிறது

2.அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது.

3.அன்னாசி பழம் தோல் வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது.

4.அன்னாசிப்பழத்தை உட்கொள்வதன் மூலம், முடி உதிர்தலைத் தடுக்க முடிகிறது.

5.அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை முடி உதிர்வதைத் தடுக்கிறது.

6.அன்னாசி பழம் என்பது சளி மற்றும் இருமலைத் தடுக்க உதவும் ஒரு பழமாகும்.

7.அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இது சளி மற்றும் இருமலை நீக்குகிறது.

8.அன்னாசிப்பழத்தின் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது. இது இதயத்தை பாதுகாக்கிறது.

9.அன்னாசிப்பழத்தை தினசரி உட்கொள்ள வேண்டும். அன்னாசிப்பழத்தில் நிறைந்துள்ள மாங்கனீசு எலும்புகளை வலுப்படுத்துகிறது

10.அன்னாசி பழம் மூட்டுவலி போன்ற எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தடுக்கிறது.