அதிகளவு புளியை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்

சென்னை: புளி உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது ஒவ்வாமை ஏற்படலாம். தோல் சிவத்தல், வீக்கம், தலைவலி, வாந்தி, அரிப்பு போன்றவை உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

புளி அதிக அமிலத்தன்மை கொண்டது. புளியை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இது பற்களில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு நாக்கு எரிச்சலை உண்டாக்கும். உணவில் புளி சேர்ப்பதை குறைக்க வேண்டும்.

விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, உணவில் புளியை அதிகமாக சாப்பிடுவது பித்தப்பையில் கற்கள் உருவாக வழிவகுக்கும். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.

உணவில் புளியை அதிகம் சாப்பிட்டால் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாது. இது நீண்ட காலத்திற்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். உணவில் இருந்து நமக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை. அதிக அமிலத்தன்மை காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம்.