தேங்காய் எண்ணெயின் அளவற்ற நன்மைகள்

சுத்தமான தேய்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க உதவுகிறது. அதிக உடற்பயிற்சி செய்வதைவிட, சரியான டயட் உடல் எடை வேகமாகக் குறைய உதவும். எடை குறைப்புக்கு மட்டும் அல்ல சரும பராமரிப்புக்கும் சிறந்த எண்ணெய் தேங்காய் எண்ணெய் தான்.

தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் இ, ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பாலிபெனோல்ஸ் உடல் எடையை அதிகரிக்கும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யை தான் பயன்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய் நல்லது என்பதால் அதற்காக அளவுக்கு அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு 30 மில்லி அளவே பயன்படுத்த வேண்டும்.

இதையடுத்து இது 2 முதல் 3 ஸ்பூன் அளவு மட்டுமே. காய்கறிகளை சமைக்கும்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு தாளித்து சமைக்கலாம். அதேபோல ஆலிவ் எண்ணெய்க்கு பதில் சாலட்களில் இதனை பயன்படுத்தலாம்.

காய்கறிகளை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவிகட்டி பின் சிறிதளவு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தாளித்து சாப்பிடலாம். அதிக காரம் போட்டு சாப்பிடக் கூடாது. மதிய உணவாக காய்கறிகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.இரவு தூங்கும் முன் முகம், கை, கால்களில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை பூசி தூங்கலாம். தினமும் இப்படி செய்வதால் முகம் பளபளக்கும். அதேபோன்று அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.