தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டாங்க

பேரிக்காய் ஒரு பருவ மழைக்கால பழமாகும். ஆடி மாதத்தில் வரும் ஆடி பெருக்கு திருவிழாவில் முக்கிய பழமாக பேரிக்காய் இருப்பதை பார்க்க முடியும். இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது பொட்டாசியம், பெக்டின் மற்றும் டானின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. மேலும் இது யூரிக் அமிலத்தை கரைத்து அதன் மூலம் வாத நோய்களை குணப்படுத்துகிறது.

பேரிக்காய் அதிகமாக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது, இதனால் இது மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. பேரிக்காய் இனிப்புச் சுவை குறைவாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது, இது இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. பேரிக்காய் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும்.

பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சி மற்றும் உடல் வலிமைக்கு உதவுகிறது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வர இதய படபடப்பு நீங்கும்.கர்ப்பிணிப் பெண்களுக்கு, வளரும் குழந்தை நன்றாக வளர பேரிக்காய் உதவுகிறது. சிறுநீரக கற்களை அகற்ற உதவுகிறது. இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும் பயன்படுகிறது.

இது வயிறு, குடல் மற்றும் பிற செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை பயக்கும். தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது. ‘நேட்டு ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் இதில் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, பி2 உள்ளது.