துரித உணவுகளால் உடலுக்கு ஏற்படும் பிரச்சினையை போக்கும் வழிமுறைகள்

சென்னை: துரித உணவுகளை உண்பதன் காரணமாக மிகப் பெரும்பான்மையான நபர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது மேலும் இந்த நெஞ்செரிச்சலில் இருந்து தப்பித்துக் கொள்ள பல வகைகளில் முயற்சி செய்தாலும் அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவது சற்று சிரமமாகத்தான் உள்ளது.

காலம் நேரம் பார்க்காமல் சாப்பிடுபவர்கள் மற்றும் எந்த உணவையும் சாப்பிடும் போது அவர்களுக்கு அசிடிட்டி எனப்படும் நெஞ்செரிச்சல் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக நீண்ட இடைவெளி பட்டினி கிடந்து அதன் பிறகு உணவை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு இதுபோன்ற அசிடிட்டி ஏற்படுவது இயல்பான விஷயமாகவே உள்ளது.

அப்படி அசிடிட்டி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அசிடிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கட்டாயம் சேப்பங்கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. இதன் மூலம் அவர்கள் வயிற்றில் வாயு பிரச்சனை உண்டாகி மலச்சிக்கல் ஏற்படுவதோடு அசிடிட்டி ஏற்படும்.

வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள் கட்டாயம் முள்ளங்கியை உணவில் அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள் அப்படி அதிகமாக சேர்க்கும் போது வயிற்று வலி ஏற்பட்டு உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும்.

கத்திரிக்காயில் உள்ள சோலனைன் என்ற வேதிப்பொருளானது வாயு பிரச்சனையை உண்டாக்கும். எனவே அந்த காய்கறி நீங்கள் உண்பதை தவிர்த்து விடுங்கள்.

வெங்காயத்தில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் வாயு பிரச்சனையை அதிகரிக்க தோண்டிவிடும் எனவே பெரிய வெங்காயத்தை பச்சையாக நீங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள் இதன் மூலம் உங்களுக்கு வாயு தொல்லை ஏற்படாது.