பூசணி விதைகளால் நாம் எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை பெறலாம்

பூசணி விதைகளில் நார்ச்சத்து: 1.5 கிராம், கார்போஹைட்ரேட்: 2.10 கிராம், புரதச்சத்து: 3.70 கிராம், கொழுப்பு: 6.80 கிராம், சர்க்கரை: 0.20 கிராம் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.பூசணிவிதையில் சிறந்த அளவிலான ஆக்சிஜனேற்ற பண்பும், நிறைவுறா பல கொழுப்பு அமிலங்களும், பொட்டாசியமும், வைட்டமின் B யும், போலேட்டும் உள்ளது.

இதோடு சேர்த்து, பல ஆரோக்கிய பலன்களை அளிக்கும் தாவர கலவைகளும் உள்ளன.பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் ஆக நாம் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவும். இது நம்முடைய உடல் கொழுப்பை எரிக்க உதவுவதோடு, தசைகளை கட்டமைக்கவும் உதவுகிறது.

இவை நிறைவுற்றவை. மேலும் துத்தநாகம் மற்றும் கால்சியம், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.நார்ச்சத்து நம்முடைய செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. இதனால், நமக்கு உண்டாகும் பசியையும் குறைக்கக்கூடியது.

இதையடுத்து வயிறு முட்ட சாப்பிடாமல் இருக்க இது நமக்கு உதவி செய்கிறது. எனவே எடையை இழப்பதென்பது நமக்கு எளிதாகிறது. துத்தநாகம் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் நாம் எடையை இழப்பதோடு, எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தையும் பெறுகிறோம்.