PCOS என்றால் என்ன? கட்டுப்படுத்துவது எப்படி?

பாலிசிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது பெண்களின் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களில் ஒன்றாகும். இந்த நோயில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக எடை அதிகரிக்கிறது.

இதனால் மாதவிடாய் ஒழுங்கற்றதாகிறது. முகத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த நோயில், கருப்பையில் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது, மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்பும் இதில் உள்ளது.இந்த நோயில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

இதை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்த நல்ல உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் மருந்துகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.பிசிஓஎஸ்-ஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்க நடைப்பயிற்சி சிறந்த வழியாகும்.

ஏரோபிக், கார்டியோ அல்லது உடல் எடையை குறைக்கும் எந்த வகையான உடற்பயிற்சியும் இதற்கு உதவும். நடனத்தில் ஆர்வம் உள்ளவர்கள் நடனமாடியும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யலாம்.