ஆண்களைவிட பெண்களே அதிக நோய்வாய்ப்பட வாய்ப்பு: ஆய்வு சொல்லும் தகவல் ..

ஆண்களைவிட பெண்கள் அதிக நாட்கள் வாழ்வதால், ஆண்களைவிட பெண்கள் அதிக நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில் இது தொடர்பாக ஜார்ஜியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், பெண்கள் நோய்வாய்ப்படுவதை, சிறந்த டயட் திட்டத்தால் தடுக்க முடியும் என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிகின்றன. சேனைக்கிழங்கு, கீரை, தர்பூசணி, குடை மிளகாய், தக்காளி, ஆரஞ்சு, கேரட் ஆகிய உணவுகளை பெண் சாப்பிடுவது அவசியம். இந்த வெவ்வேறு நிறங்களை கொண்ட காய்கறி மற்றும் பழங்கள் பார்வை மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஏற்படாமல் தடுக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆய்வு இதற்கு முன்பாக நடந்த ஆய்வுகளின் தரவுகளை அலசி ஆராய்ந்துள்ளது.ஆண்களைவிட பெண்களுக்கு உடலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகம். குறிப்பாக பெண்கள் கர்ப்பமான காலத்தில், வைட்டமின், மினரல்ஸ் ஆகியவற்றை உடலுக்கு கொண்டு செல்ல இந்த கொழுப்பு பயன்படுக்கிறது. ஆனால் இதுவே கண்களில் உள்ள ரெட்டினா மற்றும் மூளைக்கு ஆபத்தாக முடிகிறது. உடலால் இந்த பாகங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தமுடியவில்லை என்பதால் பிரச்சனைகளை ஏற்படுகிறது.

இந்த பழங்களை சாப்பிடுவதால், ஆன்டி ஆக்ஸிடண்ட் தருகிறது.நமது கண்கள் மற்றும் மூளையில் இரண்டு முக்கியமான கெரோட்டினாய்ட்ஸ் இருக்கிறது. லூயிடெயின் மற்றும் சியான்தின் இவை நமது நரம்பு மண்டலம் செதமடைவதை தடுக்கிறது.

ஆண்களும் பெண்களும் ஒரே அளவில்தான் கெரோட்டினாய்ட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால் பெண்களுக்கு அதிக அளவில் கெரோட்டினாய்ட்ஸ் தேவை இருக்கிறது என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது