சென்னையில் கொரோனாவுக்கு 12,013 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 52 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,70,025 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 12,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,325
அண்ணா நகர் - 1,220
தேனாம்பேட்டை - 1,171
தண்டையார்பேட்டை - 802
ராயபுரம் - 885
அடையாறு - 1,069
திரு.வி.க. நகர்- 1,005
வளசரவாக்கம் - 788
அம்பத்தூர் - 866
திருவொற்றியூர் - 323
மாதவரம் - 525
ஆலந்தூர் - 666
பெருங்குடி - 544
சோழிங்கநல்லூர் - 331
மணலி - 244